அண்மையில் நடைபெற்ற வலய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் எமது பாடசாலை சார்பாக பங்கு பற்றிய மாணவர்களுள் 07 பேர் மகாணமட்டத்திற்குத் தெரிவாகியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மாகாண மட்டப்போட்டியில் எம். முஹம்மத் தல்ஹா எனும் மாணவர் சித்தியடைந்து தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இம்மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணமுள்ளன.
அத்தோடு இதனை நெறிப்படுத்திய பாடசாலையின் அதிபர் ஏ.எல். முஹம்மட் பாயிஸ் அவர்களுக்கும் இம்மாணவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கிய பாடசாலையின் கணித ஒலிம்பியாட் குழுவிற்கும் இந்நிகழ்விற்கு பொறுப்பாக இருந்த பிரதி அதிபர் ஏ.ஜி. அஹமட் சமூர் அவர்களுக்கும் பாடசாலை சார்பாக மனப்பூர்வமான நன்றிகள்!!
மேலும், தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ள எம். முஹம்மத் தல்ஹா எனும் மாணவருக்கு பாடசாலை சமூகம் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றது!!



கருத்துகள் இல்லை