Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

கோணாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலை சிரமதானம் செய்த அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகம்!

(Addalaichenai NET) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தினத்தில் கோணாவத்தை ஜும்மா பள்ளிவாயிலின் வளாகம் மற்றும் சுற்றுப்புற சூழல் ஆகியன நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் சிரமதானம் செய்யப்பட்டது.

கழகத்தின் தலைவர் எஸ். நாசர் தலைமையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வில் கோணாவத்தை ஜும்மாப் பள்ளிவாயல் தலைவர் எஸ் எல் எம் ஏ ஜப்பார், அரபா வட்டார உறுப்பினர் அஸ்வர்சாலி மற்றும் கிராம உத்தியோகத்தர் அஸ்லம் சஜா, ஆகியோர் கலந்து கொண்டனர்.


"எதிர் வருகின்ற ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் பொருட்டும், வளரும் தலைமுறையினருக்கு முன்மாதிரியான ஒரு செயற்பாடாகவும் கழகத்தினால் வருடா வருடம் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்திட்டமாக இச் சேவை அமைந்திருக்கின்றது. இன்னும் விளையாட்டுத் தவிர்ந்த பல வகையான வேலைத் திட்டங்களை எங்களது கழகம் இந்த 2026 இல் திட்டமிட்டு செய்ய இருக்கின்றது என கழகத்தின் தலைவர் தெரிவித்தார். 


மேலும் வாலிபர்களையும் இளைஞர்களையும் பள்ளிவாயல்களோடு இணைக்கக்கூடிய செயல் திட்டங்களையும் நாங்கள் தொகுத்து செயற்பட உள்ளோம்" என்றார். 










கருத்துகள் இல்லை