அட்டாளைச்சேனை அந்-நூர் பாடசாலையில் இந்த ஆண்டுக்கான அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா. 09 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.அதன் அடிப்படையில்,
கட்டிட புனரமைப்பிற்காக ரூ. 7 மில்லியன் ரூபாவும்,
ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டத்திற்காக ரூ. 2 மில்லியன் ரூபா என மொத்தமாக ரூ. 9 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அட்டாளைச்சேனை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பாடசாலைக்கு விஜயம் செய்து, பாடசாலை அதிபருடன் இது தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பில், பாடசாலையின் அபிவிருத்தி, கட்டிட புனரமைப்பு பணிகள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த அபிவிருத்தி திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட்டு, மாணவர்களின் கல்வித் தரம் மேலும் உயர்வடையும் என நம்புகிறோம்.
(அட்டாளைச்சேனை.நெட்)



கருத்துகள் இல்லை