Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் தோற்றமும் வளர்ச்சியும்.

ஒரு ஓடை நதியான கதை



வைத்தியாசலை உருவான பின்னணி

1990ம் ஜூன் 1ம் திகதி CD&MH பாலமுனை, மற்றும் அட்டாளைச்சேனை வைத்தியசாலை வைத்தியர்கள் இருவரும் சடுதியாக தமது சொந்தவூரான யாழ்ப்பாணத்திற்கு லீவில் செல்கின்றனர்.

CD&MH அட்டாளைச்சேனைக்கு CD பனங்காடு பொறுப்பு வைத்தியர் பதில் கடமைக்கு நியமிக்கப்படும் அதே வேளை CD ஒலுவில் பொறுப்பு வைத்தியர் பாலமுனை CD &MH யில் பதில் கடமையாற்ற பணிக்கப்படுகிறார்.

புலிகளுக்கும் அரசுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தத் தை அடுத்து பிராந்தியத்தின் வைத்தியசேவை ஓரளவு வழமைக்கு திரும்பிய வேளையில் அந்த சம்பவம் நடைபெறுகிறது.

சரியாக 11.06.1990 அன்று

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொலீசாரும் அனைத்து ஆயுதங்களையும் தங்களிடம் ஒப்படைத்துவிட்டு காவல் நிலையங்களை பிற்பகல் 2.30 மணிக்குள் காலி செய்யுமாறு புலிகள் உத்தரவிட்டனர் .

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் வேண்டுகோளுக்கு இணங்க பொலிஸ் அதிகாரிகளை சரணடையுமாறு பொலிஸ் மா அதிபர் ஏர்னஸ்ட் பெரேராவும் பணித்தார்.

அந்த பணிப்பை பொருட்படுத்தாது சில பொலிசார் தப்பிச்செல்ல 800 க்கும் அதிகமான பொலீசார் ஆயுதங்களை கையளித்துவிட்டு நிராயுதபாணியாக புலிகளிடம் சரணடைந்தனர்.

எழுவாட்டுவான் மைதானத்திற்கு அருகில் முன்னைய AGA காரியலையத்தில் அமைந்திருந்த அக்கரைபற்று பொலிஸ் நிலையம் உட்பட முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பொலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டன .
தங்களிடம் சரணடைந்த தமிழ் பொலீசாரை மட்டும் விடுதலை செய்துவிட்டு சிங்கள, மற்றும் முஸ்லீம் பொலீசாரை கடத்திச்சென்று கொலை செய்தனர்.
அதன் பின்னணியில் தமிழ் முஸ்லிம் கலவரம் வெடித்தது .

கலவரசூழல் மிகப்பயங்கரமாக இருந்தது அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்த்திருந்தது.

கலவர சூழலில் தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களும் முஸ்லீம் சிங்கள பிரதேசங்களில் தமிழரும் செல்ல முடியாத நிலை.

ஆலையடி வேம்பு பிரதேசத்தில் அமைந்திருந்த அக்கரைப்பற்று சுற்றயல் கூறு வைத்தியசாலைக்கு முஸ்லீம் வைத்தியர் உட்பட முஸ்லீம்கள் யாரும் செல்லமுடியாத நிலை.

பனங்காடு பொறுப்பு வைத்தியர் உட்பட லீவில் யாழ்ப்பாணம் சென்றிருந்த வைத்தியர்களுக்கும் வேலைக்கு திரும்பமுடியாத நிலை. PU அக்கரைபற்றில் கடமைபுரிந்த Dr லாபிறா அக்கரைப்பற்றிலிருந்து அட்டாளைச்சேனை CD&MH க்கு தற்காலிகமாக இடமாற்றம் பெற பிரச்சனை ஓரளவு தீர்க்கபட்டது .

பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு அட்டாளைச்சேனை வைத்தியாசலையில் OPD மட்டும் இயங்க மகப்பேற்று மனை(MH) கட்டிடம் பொலிஸ்நிலையமாக மாறியது .

ஆனால் பெருந்தொகையான அக்கரைப்பற்று முஸ்லீம்களின் வைத்திய தேவையை பூர்த்திசெய்ய பொருத்தமான வைத்தியாசலை ஒன்றில்லை என்ற விடயம் மிக மிக அவசியமாக உணரப்பட்டது .

புதிதாக ஒரு தற்காலிக வைத்தியசாலை ஒன்றையாவது அமைப்பது பற்றி அக்கரைப்பற்று முஸ்லீம் மக்கள் தீவிரமாக ஆலோசித்ததின் பின்னணியில் தங்களுக்குள் ஒரு சுகாதார குழுவை நியமித்தத்துக் கொள்கின்றனர்.

கலவர சூழ்நிலை காரணமாக அம்பாறை RDHS வேலைக்கு செல்ல முடியாத நிலையில் கொழும்பு RDHS ஆக கடமையேற்க அம்பாறை வைத்தியாசலை DMO Dr றகீஸ்து அம்பாறை பிராந்திய பதில் RDHS ஆக கடமையேற்கிறார் .

அக்கரைப்பற்றை சேர்ந்த RDHS Dr றக்கீஸ்து அமைச்சர் ARM மன்சூரின் பக்க பலத்துடன் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு தற்காலிக மத்திய மருந்தகம் ஒன்றை எரியூட்டப்பட்ட பொலிஸ் நிலைய கட்டிடத்தில் ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகளை செய்தார்.

எழுவட்டுவான் மைதானத்துக்கு அருகில் இருந்த எரியூட்டப்பட்ட பொலீஸ் நிலையம் ஊர் மக்களின் பங்களிப்புடன் வைத்தியசாலைக் குழுவினால் அவசரஅவசரமாக திருத்தியமைக்கப்பட்டு "CD எழுவட்டுவான்" என்ற பெயரில் ஒரு மத்திய மருந்தகமாக உருவாகிறது.

இருந்தபோதும் முஸ்லீம் வைத்தியருக்கான பற்றாக்குறை காரணமாக
18.9.1990 இல் Dr.லாபிறா CD&MH அட்டாளைச்சேனையிலிருந்து மாற்றப்பட்டு CD எழுவட்டுவானுக்கு பொறுப்பு வைத்தியராக நியமிக்கப்படுகிறார்.

அதனால் அட்டாளைச்சேனைக்கு வைத்தியர் இல்லை என்ற நிலை உருவாகிறது.

24.09.1990 இல் RDHS இடமிருந்து ஒலுவில் மத்திய வைத்தியசாலை பொறுப்பு வைத்தியருக்கு ஒலுவில் மற்றும் பாலமுனை வைத்தியசாலைக்கு மேலதிகமாக CD அட்டாளைச்சேனையும் பொறுப்பேற்கும்படி பணிக்கப்பட்டு கடிதம் வருகிறது.

ஒரு நாளைக்கு ஒரு வைத்தியசாலை என்ற ரீதியில் மூன்று ஊர்களின் மொத்த வைத்தியசேவையும் சீர் குலைகிறது.

Dr. M.A லாபிறாவை பொறுப்பு வைத்தியராக கொண்டு 19.09.1990 இல் ஆரம்பிக்கப்பட்ட CD எழுவட்டுவான் வைத்தியசாலை திறப்பு விழாவில் அமைச்சர் மன்சூருடன் கலந்து கொண்ட திருக்கோவிலை சேர்ந்த திவ்யநாதன் MP சுவாரஷ்யமாக பின்வருமாறு குறிப்பிட்டார்.

"அக்கரைப்பற்றில் ஒரு ஓடை (பொ. நிலையம்) நதியாகிறது அட்டாளைச்சேனையில்ஒரு நதி( வைத்தியசாலை)ஓடையாகிறது" என்றார்.

பின்னர் தரமுயர்த்தப்பட்ட RH(கிராமிய வைத்தியசாலை) எழுவட்டுவானுக்கு Dr தையுபா MO in charge ஆக நியமிக்க படுகிறார். அக்காலத்தில் எழுவட்டுவான் வைத்தியசாலை தையுபா ஹாஸ்பிடல் என்றும் பொதுமக்களால் அழைக்கப்பட்டது.

இதற்க்கிடையில் Dr றகீஸ்து RDHS கேகாலைக்கு மாற்றம் பெற்றும் தனது பதவிஉயர்வை ஏற்காது 93 இல் DH எழுவாட்டுவானாக தரமுயர்த்தப்பட்ட வைத்தியாசலையில் DMO வாக கடமை ஏற்றார்.

Dr. தையுபா DDHS/MOH ஆக மாறிச்செல்ல வைத்தியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய மீண்டும் ஒருமுறை ஒலுவில் வைத்தியசாலை பகுதியளவில் மூடப்பட்டு அங்கிருந்த வைத்தியர் DH எழுவட்டுவானுக்கு அனுப்பப்பட்டார். இந்த நிலை Dr Jaufer DMO வாக 1994 இல் பொறுப்பேற்ற பின்பும் தொடர்ந்தது.

மிகப்பழைய வரலாறு கொண்ட அக்கரைப்பற்று வைத்தியசாலை (கருங்கொடி தீவு வைத்தியசாலை 1892) அமைந்துள்ள அதே ஊரில் ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் எழுவட்டுவான் என்ற பெயரில் புதிய வைத்தியசாலை ஒன்று பல எதிர்ப்புக்கு மத்தியில்தான் உருவானது.

அன்றைய சூழலில் பலம் வாய்ந்த ஐ.தே.க முஸ்லீம் அமைச்சரின் உதவியுடன் எழுவட்டுவான் வைத்தியசாலை சாத்தியமானதாகவே இருந்தது . இருந்தபோதும் மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்த எத்தனித்தபோது தான் பிரச்சினை உருவானது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த PU அக்கரைப்பற்று வைத்தியசாலையை சம்பந்தப்பட்ட தரப்பினர் தரம் உயர்த்தி கேட்டிருந்தார்கள்.

மேலும் 2 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் அட்டாளைச்சேனையில் ஒரு வைத்தியசாலை இருப்பது மாகாண அமைச்சினாலும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில் அட்டாளைச்சேனை வைத்தியசாலை அபிவிருத்தி குழு எழு வட்டுவான் வைத்தியசாலையை தரம் உயர்த்துவதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் சம்மத கடிதம் கொடுத்திருந்தார்கள் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

எழுவாட்டுவான் DH ஆனதினால்தான் பாலமுனை ஒலுவில் போன்ற வைத்தியசாலைகள் மாவட்ட வைத்தியசாலை ஆனபின்பும் 1950 களில் உருவான அட்டாளைசேனை வைத்தியசாலையால் மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர முடியவில்லை .

கடைசிவரை அது PU ஆகவே இருந்தது. அரசாங்கத்தின் புதிய வைத்தியசாலை தரப்படுத்தல் கொள்கையின் பிரகாரம் அட்டாளைச்சேனை வைத்தியசாலை, பிரதேச வைத்தியசாலை C grade இலும் பழமை வாய்ந்த பாலமுனையும், 1985 இல் உருவான ஒலுவில் வைத்தியசாலையும் B grade தரவரிசையிலும் காணப்படுகிறது.

இதே நேரத்தில் பின்னைய காலங்களில் DH எழுவட்டுவான் அமைச்சர் அதாவுல்லாவின் பங்களிப்புடன் அபரீதமாக வளர்ச்சி பெற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையாக தரமுயர்ந்தது.

இன்று இதன் சேவை இந்த பிராந்தியத்திற்கு மிகவும் பிரயோசனமாக திகழ்வதால் பொதுமக்கள் இதன் உருவாக்கத்தில் வளர்ச்சியில் சம்மந்தப்பட்டவர் அனைவருக்கும் நன்றி செலுத்துகின்றனர்.

இந்த வரலாறு பலருக்கு கசப்பாக இருந்தாலும் பல ஊர் மக்களினதும் தியாகத்தினாலும் பல அரசியல்வாதிகளின் அர்ப்பணிப்பாலும் உருவான வைத்தியசாலை இது என்பது மறைக்க முடியாத உண்மை.

எல்லா ஊரும் நமது ஊரே. நல்லவை எங்கு நடந்தாலும் யார் பொருட்டு நடந்தாலும் நலமே.

( இது எவருக்கும் ஆதரவாகவோ எதிராகவோ எழுதப்பட்ட கட்டுரை அல்ல)
Kiyas samsudeen #AddalaichenaiNET

கருத்துகள் இல்லை