Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

Sober அணி மீது வாள்வெட்டு முயற்சி! ஒலுவில் அணிக்கு தடை

சோபர் அணி மீது, வாள்வெட்டு முயற்சி! நல்ளிரவில் பாலமுனையில் நடந்த சம்பவம் பற்றி சோபர் வெளியிட்ட அறிக்கை! 

பிஸ்மில்லாஹிரர்ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் 

விளையாட்டை நேசிக்கின்ற ரசிக்கின்ற அனைத்து மக்களுக்குமான கழங்களுக்குமான 

விளையாட்டு வீரர்களுக்குமான முக்கியமான அறிவித்தல் ஒன்று  எமது SOBER விளையாட்டு கழகமானது அண்மைக்காலமாக பல்வேறு வெற்றிக்கிண்ணங்களை சுவீகரித்துக் கொண்டு வருகின்றது  அதன் அடிப்படையில் இன்று பாலமுனை 

Tri star விளையாட்டு கழகத்தினால் 

ஏற்பாடு செய்யப்பட்ட இரவு நேர சுற்றுப்போட்டியில் எமது அணி பங்குபற்றி இருந்தது 

அதன் அடிப்படையில் இன்று காலிறுதி போட்டியில் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த EASTERN WORIERS அணியினருக்கும் எமது கழகத்திற்கும் இடையிலான போட்டி இடம்பெற்று கொண்டிருந்தபோது

 3.4 பந்துகளில் 19/4 பெற்றிருந்தது 

அந்த சந்தர்ப்பத்தில் நாகரீகமற்ற  முறையில் EASTERN WORIORS அணியினுடைய வீரர் ஒருவர் 

SOBER கழக வீரர்களையும் ஆதரவாளர்களையும் வாள் மற்றும் கோடாரியுடன்  வெட்டுவதற்காகக தயாராகியிருந்தனர் ...

இது திட்டமிட்டு செய்யப்பட்ட  கொலை முயற்சியாகும் .. 

உண்மையில் நல்ல படித்த பண்பான ஒழுக்கமான மக்கள் வாழுகின்ற ஒலுவில் மண்ணில் இவ்வாறான ஒரு செயலை செய்கின்ற ஒரு அணி இருக்கின்றது என நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது ...

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 

என்ற பழமொழி பொய்யாவது போன்றதாகவே  நான் இதை பார்க்கின்றேன் 

அந்த வேளையில்  ஏற்பாட்டு குழுவினர்கள்  துரிதமாக செயற்பட்டு  அந்த விடையம்   முறையடிக்கப்பட்டு இருந்தது...

 இருந்தபோதிலும் இவர்கள் நாகரிகமற்ற  முறையில் நடந்து கொண்டதினால் எங்களுக்கு வெற்றி வழங்கி 

அரை இறுதிப் போட்டிக்கு தெரிவு  செய்யப்பட்டுள்ளோம்  

என்று உத்திய பூர்வமாக அறிவித்திருந்தார்கள்..

ஏற்பாட்டு குழுவினருக்கு நன்றிகள்..

இருந்த போதிலும் அவர்களுடைய அணியினர் எதிர்வரும் காலங்களில் பாலமுனை ஊரில் எந்தவிதமான போட்டிகளிலும் பங்குபற்ற  முடியாமல் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல்  எமது கழகத்தினுடைய உறுப்பினர்களையும் வீரர்களையும் இவ்வாறு வாளால் வெட்டுவதற்கு முயற்சி செய்த அந்த அணியினர்  இனிமேல் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திலும் அட்டாளைச்சேனை  பிரதேசத்திலும் அவர்கள்  விளையாட  தடை விதிக்கப்பட்டுள்ளது 

என்பதனை மன வருத்தத்துடன் அறியத் தருகின்றேன் .

இதன் அடிப்படையில் ஏனைய கழகங்கள் உங்களுடைய வீரர்களின் உயிர்களையும் அவர்களுடைய திறமைகளையும்  பாதுகாப்பதினுடைய நோக்கத்தை அறிந்து  தயவுசெய்து  இவ்வணி வீரர்களையும் அணியையும் தடை செய்யுமாறு  வேண்டப்படுகின்றீர்கள் ..

 இந்த போட்டியில்  இந்தப் பிரச்சினைகளில் இருந்து எங்களை பாதுகாக்க  உதவி புரிந்த முதலாவதாக   அல்லாஹ்விற்கும்  பாலமுனை #tristar விளையாட்டு கழகத்தினருக்கும்  கழகம் சார்பாக வாழ்த்துக்களையயும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 

அவர்கள் #வாளால் வெட்டுவதற்கு முயற்சி செய்த காணொளி மிக #விரைவில் வெளியிடப்படும் என்பதனையும் அறியத் தருகின்றேன் ...

இன்ஷா அல்லாஹ்.....

கருத்துகள் இல்லை