முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வருகின்ற கிராமங்களில் ஒலுவில் கிராமம் பிரதானமான கிராமமாகும்.
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் பழைய உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அட்டாளைச்சேனை பிரதேசத்தை மு.கா கைப்பற்றி ஒலுவில் கிராமத்தைச் சேர்ந்த நூஹ் லெவ்வை அவர்கள் அம்மக்களின் அதி கூடிய வாக்குகளைப் பெற்ற நிலையில் தவிசாளராக பொறுப்பாக்கப் பட்டார்.
அதன் பிற்பாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மு.கா கட்சி அரசியல் ரீதியான எந்தவொரு அதிகாரத்தையும் ஒலுவில் கிராமத்திற்கு கொடுத்த வரலாறு இல்லை.
இறுதியாக ஒலுவில் கிராமத்தின் ஏ.எல் அமானுள்ளாஹ் அவர்கள் குலுக்கல் முறையில் தவிசாளராக தெரிவு செய்யப் பட்டு பதவி வகித்தார். தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் அமானுளாஹ் உட்பட இரு வட்டாரங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.
ஒலுவில் கிராமத்தின் அதி உச்ச அதிகாரம் பிரதேச சபைக்கான தவிசாளர் பொறுப்பே ஆகும். மாகாண சபையினதோ அல்லது பாராளுமன்ற அதிகாரத்தையோ ஒலுவில் கிராமம் கேட்கப் போவதில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒலுவில் கிராமத்து மக்களின் அபிலாஷைகளை அதன் பேரபிமானிகளின் கோரிக்கைகளை உதாசீனம் செய்துள்ளது. அதன் தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிலைமையின் தன்மை கருதி பல கடிதங்கள் மூலமாகவும் மற்றும் நேரிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் அது உரிய தரப்பினரால் கணக்கில் எடுக்கப்படவில்லை.
அதிகாரங்களை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பதன் மூலமே கிராமங்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்ய முடியும். இக்கோரிக்கையை பிரதேச வாதமாகவோ அல்லது ஊர் வாதமோ எடுத்துக் கொள்ள முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் ஒலுவில் மக்களின் அபிலாஷைகளை கணக்கில் எடுக்காது உதாசீனம் செய்துள்ளது.
நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் எடுக்க தவறியுள்ளது. இது ஒலுவில் கிராமத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அபிமானிகளிடத்தில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.பைசால் (காஷிபி)



கருத்துகள் இல்லை