Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

தனது தவிசாளர் பதவியின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் ASM. உவைஸ்!


(அட்டாளைச்சேனை நெட்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளாக தெரிவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸ் (ASM. UWAIS- Addalaichenai Chairman) தனது தவிசாளர் பதவியின் கடமைகளை இன்று (02) மாலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (Sri Lanka Muslim Congress) பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உறுப்பினர் உதுமாலெப்பை (MS. Uthumalebbe JP) , அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் இர்பான் உள்ளிட்டோருடன் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

அரசியல், ஊர் பாகுபாடு இன்றி முழு அட்டாளைச்சேனைக்குமான சேவகராக இவர் சேவையாற்ற அட்டாளைச்சேனை நெட் இணையம் ஊடாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினராக இவர், நீண்ட நாட்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக பிரதேச சபை உறுப்பினராக தெரிவாகி சேவையாற்றிய தவிசாளர் உவைஸ் இம்முறை இக்ரா வட்டாரத்தில் போட்டியிட்டு 1,416 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பித்தக்கது.


நீண்டகால உள்ளூர் அரசியலில் செயற்பாட்டிலுள்ள இவருக்கு சமூகத்தின் மத்தியில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நல்லெண்ணம் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. Addalaichenai NET

கருத்துகள் இல்லை