அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட PMY.Arafath Mohideen அவர்கள் உத்தியோகபூர்வமாக இன்று கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
2026.06.01ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக PMY.Arafath Mohideen கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் செயலாளர் அவர்களினால் நியமனம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையிலேயே பதவி உயர்வு பெற்று அக்கறைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அக்கறைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பௌஸ் தலைமையில் இடம்பெற்ற இன்றைய பதவியேற்பு நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட கல்வி அதிகாரிகள், அவரது மனைவி குடும்பத்தினர் என பெருமளவானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மருதமுனை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கமு/அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.





கருத்துகள் இல்லை