அட்டாளைச்சேனை சம்புநகர் அல்- மினா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 20 வருடங்களின் பின்னர், முதல் தடவையாக மாணவர் ஒருவர் – அண்மையில் வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடாலையின் தற்போதைய அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் எடுத்து வரும் அர்ப்பணிப்பான முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக, இந்த அடைவு பார்க்கப்படுகிறது.
2024 ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் எம்.எச்.எம். மில்பர் என்ற மாணவன் 146 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். இவருடைய அம்பாறை மாவட்டத்தில் சித்தியடைவதற்கான வெட்டுப்புள்ளி 139 ஆகும்.
அதிக கஷ்டப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையில் – கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை காலை முதல் மாலை வரை மேற்கொண்ட ஆசிரியர்களான ஏ.ஜீ. ஹம்சார், ஏ.ஏ.எம்.அறுாஸ், நஸ்நஸ் ஆசீக் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவனின் பெற்றோர், இந்த மாணவன் சித்தியடைவதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்.
இப் பாடசாலைக்கு சிறந்த ஆசிரியர்களை நியமித்த அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்சேய்க் ஏ.எம். றஹ்மத்துல்லாவுக்கு பாடசாலையின் அதிபர் றியாஸ், இத்தருணத்தில் தனது நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர், பாடசாலையின் நலன் விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
சுமார் 20 வருடயங்களுக்குப் பின்னர் ஒரு பாடாசாலைய – தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்சித்தியடைவதற்காக உழைத்த அந்தப் பாடசாலையின், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
அஹமட் (புதிது)
அட்டாளைச்சேனை ஊருக்கான நமது ஒன்லைன் சஞ்சிகை: அட்டாளைச்சேனை நெட்
For ADDALAICHENAI WHATSAPP: https://chat.whatsapp.com/G1wbJ3pz5guIttZWLtbL8c


கருத்துகள் இல்லை