Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

தலைவர் அஷ்ரபின் ஒலுவில் இல்லம், தென்கிழக்கு பல்கலைக்கு..!

 


மாபெரும் தலைவர்  கலாநிதி மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின்...  ஒலுவிலில் அமைந்துள்ள  உத்தியோகபூர்வ இல்லத்தை தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு நன்கொடையாக வழங்குவதற்கு விருப்பம் தெரிவிப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் . முன்னாள் அமைச்சர் . கலாநிதி. ஜனாதிபதி சட்டத்தரணி. மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம்  தற்பொழுது  28  வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில் அதன் பயணத்தின் ஒரு  மைல் கல்லாக ஒலுவில் வெளிச்ச வீட்டு வீதியில்  அமையப்பெற்றுள்ள  மர்ஹூம் எம்.எச். எம். அஷ்ரப்  அவர்களின் கனவு இல்லம்   அவரது  பாரதியாரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ  பேரியல் அஷ்ரப் அவர்களும் அவரது அன்பு புதல்வர் அமான் அஷ்ரப்  அவர்களும் இணைந்து  தென்கிழக்கு பல்கலைக் கழத்திற்க்கு நன்கொடையாக வழங்க தமது பூரண விருப்பத்தினை

தெரிவித்துள்ளனர்.

  மேலும் தெரியவருவது தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் தற்போதைய  உபவேந்தர் கலாநிதி U.L.  அப்துல் மஜீட் அவர்களின் பெரு

முயற்சியால்   கடந்த 21 ஆம் திகதி  ஜனவரி மாதம் 2025 ஆம் ஆண்டு கொழும்பு நாரயாம்பிட்டியவில் உள்ள தலைவரின் இல்லத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ  கலந்துரையாடலின் போது தலைவரின்  உத்தியோகபூர்வ  ஒலுவில் இல்லத்தை  தென்கிழக்கு பல்கலைகழகத்துக்கு வழங்குவதற்கான விருப்பத்தினை வெளிப்படுத்திய கடிதத்தை அவரது  பாரியாரும் மகனும்  தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் அவர்களிடம் கையளித்தனர்.

 இந்த விடயத்தினை உபவேந்தர்.  கலாநிதி யு.எல். அப்துல் மஜீத் அவர்கள் கடந்த 25 ஆம் திகதி ஜனவரி 2025 ல் நடை பெற்ற பல்கலைக்கழக பேரவையின் கூட்டத்தொடரில்,  கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன் இது தொடர்பில் சிறப்புரையையும் நிகழ்த்தினார்.

பேரவை  உறுப்பினர்கள் உபவேந்தரைப் பாராட்டியதுடன், மேலும் இது தொடர்பில் பேரவையினால் அங்கீகாரமும் வழங்கப்பட்டது . 

இந்த காணியின் மொத்த பரப்பளவு 01 ஏக்கர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பான அபிவிருத்தி பணிகள்  இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தினால் எதிர் காலங்களில்  நடை முறைப்படுத்தப்படும்.

கீறல் 

For ADDALAICHENAI WHATSAPP அட்டாளைச்சேனை வட்ஸ்ப் குழுவில் இணைய:  https://chat.whatsapp.com/G1wbJ3pz5guIttZWLtbL8c

கருத்துகள் இல்லை