Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

வரலாற்று சாதனை படைத்த அர்ஹம் வித்தியாலயம்! O/L Results of 2024




அட்டாளைச்சேனையின் கல்வி வரலாற்றில் தன் பெயரை பொலிவுடன் பதித்து இம்முறை வரலாற்று சாதனையை  அல் அர்ஹம் வித்தியாலயம் நிலைநாட்டியுள்ளது. 

 2024 (2025) ஆம் ஆண்டுக்கான G.C.E. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளில் அர்ஹம் வித்தியாலயம் 94% தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்து, குறிப்பிடத்தக்க சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

அட்டாளைச்சேனை கோட்டத்தில் அர்ஹம் வித்தியாலயம் பாடரீதியான பெறுபேறுகளில் முதன்மை வகித்துள்ளது. 

மேலும், ஏ.எப்.நதீஸ், எம்.ரி.எம்.அர்பாத் ஆகிய இரு மாணவர்கள் 09A பெறுபேறுகளைப் பெற்று, பாடசாலையின் கல்வி தரத்தையும் புகழையும் நாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

2024 (2025) பரீட்சைக்குத் தோற்றிய 32 மாணவர்களில் 30 பேர் உயர்தர கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். இது அல் அர்ஹம் வித்தியாலயத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

தேர்ச்சி விகிதங்கள் (பாடவாரியாக):

▪️தமிழ் மொழி மற்றும் இலக்கியம் – 100%

▪️கணிதம் – 84%

▪️விஞ்ஞானம் – 100%

▪️வரலாறு – 100%

▪️இஸ்லாம் – 100%

▪️அரபு இலக்கிய நயம் – 100%

▪️சிங்களம் – 100%

▪️தொலைதொடர்பு தொழில்நுட்பம் (ICT) – 97%

▪️சுகாதார மற்றும் உடற்கல்வி – 100%

▪️ஆங்கிலம் – 97%

▪️குடியியல் கல்வி – 100%

தமிழ் இலக்கியநயம் – 93%

இந்தச் சாதனைகள், மாணவர்களின் முனைப்பும், அதிபர் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணமும், மற்றும் முழுமையான பாடசாலை ஒத்துழைப்பும் அடிப்படையாக இருந்தன என்பதை இந்த பெறுபேறுகள் வலியுறுத்துகின்றன.

பாடசாலையைப் பெருமைப்படுத்திய மாணவச்செல்வங்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.ஸாஹிர் ஹுஸைன் பாராட்டுக்களை தெரித்துள்ளார். 

அட்டாளைச்சேனை நெட் சார்பாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அதிபருக்கும், பாடசாலை சமூகத்திற்கும் வாழ்த்துக்கள் 


கருத்துகள் இல்லை