இம்முறை வெளியான க.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகளில் முதன் முறையாக 2013 ஆண்டுக்குப் பின்னர் அனபா எனும் மாணவி 5A,2B,2C எனும் உயர் பெறுபேற்றினை பெற்று பாடசாலைக்கும் ஆலங்குளம் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
மேலும் வரலாற்றில் முதன்முறையாக 90% GCE -O/L சித்தியை பதிவு செய்தது 09 மாணவர்கள் உயர்தரம் கற்க சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நஸ்ரின் எனும் மாணவி 4A,1B 3C பெறுபேற்றினை பெற்றார் குறிப்பாக ஆங்கிலப் படத்தில் A சித்தியையும்
ஆங்கில இலக்கிய பாடத்தில் C சித்தியையும் பெற்றது இதுவே முதல் தடவையாகும் .
பாடசாலை வரலாற்றில்
இம்முறை க.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகளிலும் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளமை இம்மண்ணுக்கே பெருமை சேர்த்துள்ளது.
இதற்காய் உழைத்த எமது ஊருக்கும், பாடசாலைக்கும் கிடைத்த பொக்கிஷம் வெளி ஊர்கள் எம்மை திரும்பிப் பார்க்க வைத்த எமது அதிபர் எமது கல்லூரியை முன்னணியாக்குவதற்கு இரவு பகலாய் பாடுபடும் ஆளுமை KLM.முனாஸ் அவர்களுக்கும் மற்றும் அவரோடு துணை நிற்கும் பிரதி, உதவி அதிபர்கள் AL.Ansar ,
UA Ibrahim மௌலவி குறிப்பாக தரம் 06-11 வலயத் தலைவர்கள் MB.Aariff , பசாகிர் சேர் மற்றும் உதவிப்பகுதித்தலைவர் Imran Husain tr , எம் அன்சார் சேர்
அத்தோடு இம்மாணவர்களுக்குச் சிறப்பாய்க் கற்பித்த சகல ஆசிரியப் பெருந்தகை களுக்கும் மேலான ஒத்துழைப்பை வழங்கிய பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் உளம்பூத்த நன்றிகளைத் அட்டாளைச்சேனை.நெட் இணைய சஞ்சிகை தெரிவித்துக் கொள்கிறது
AC. Habeeba.
Eng Tr.
Alamkulam ரஹ்மானிய வித்தியாலயம்


கருத்துகள் இல்லை