"Pebbles Acadamy" நிறுவனத்தின் முழுமையான அனுசரணையுடன், அக்கரைப்பற்று லோர்ட்ஸ் விளையாட்டு கழகத்தினரால் சிறப்பாக நடாத்தப்பட்ட இரவு நேர மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டி வெகு விமரிசையாக நிறைவுற்றது.
இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் த்ரில் அளிக்கும் மோதலில் சம்மாந்துறை டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, சுற்றுத்தொடரின் சம்பியனாக தெரிவாகி, 200,000/- ரூபாய் பணப்பரிசையும் வென்றது என்பது நம்மை பெருமிதப்படுத்தும் செய்தி!
சோபர் விளையாட்டுக் கழகம்,அக்ரம் அவர்களின் தலைமையில், முபாரிஸ், ரப்சான், ஜெஸீல் மற்றும் சாக்கீர் ஆகியோரின் உற்சாகத் துணையோடு, கடந்த பல தசாப்தங்களாக சொந்த மண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களுடன் அட்டாளைச்சேனை மண்ணையும் நமது பிராந்தியத்தையும் அகில இலங்கை அளவில் விளையாட்டு வீரர்களின் தலைசிறந்த உன்னதத்திற்குள் இட்டுச் செல்லும் வகையில் மிளிர்ந்த கழகம் என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை!
"சொந்த வீரர்களின் நட்பு, புரிந்துணர்வு மற்றும் அனுபவம் என்பன ஒரு சேர இருக்கும் வரை சோபரை வீழ்த்த முடியாது."
என்பதற்கு நேற்றைய இறுதிநாள் ஆட்டம் சிறந்த உதாரணம்.
மேலும் சிறிது காலத்திற்குள் உருவாகி, இறுதிப் போட்டி வரை பாய்ந்த சம்மாந்துறை டைட்டன்ஸ் அணியினருக்கும் பாராட்டுக்கள் அன்போடு தெரிவிக்கப்படுகின்றன.நீங்கள் அனைவரும் நமது ஒட்டுமொத்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்.
இறுதிப் போட்டியில், பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அமைச்சுக்கள் உட்பட பல உயர் பதவிகளை வகித்த தேசிய காங்கிரஸின் தலைவர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர கௌரவ முதல்வர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கலந்து கொண்டு, "Pebbles Acadamy" நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இன்சாப் சரிபுதீன் அவர்களுடன் இணைந்து, வெற்றிக் கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி, அணிகளை மிகுந்த உற்சாகத்துடன் கௌரவித்தார்கள்.




கருத்துகள் இல்லை