Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

அந்நூர் மகா வித்தியாலய சிறகு விரித்த சிட்டுக்களுக்கு ஆரம் சூடும் மகிழ்ச்சிப் பெருவிழா.!

2024ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் “சிறகு விரித்த சிட்டுக்களுக்கு ஆரம் சூடும் மகிழ்ச்சிப் பெருவிழா” பாடசாலை அதிபர் ஏ.எம். அஸ்மி தலைமையில் 2025.08.03ஆந் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட 08 மாணவர்களும், 100புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட 21மாணவர்களுக்குமான கெளரவம் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது. பாடசாலை பேண்ட வாத்திய குழுவின் வரவேற்புடன் சிறகு விரித்த சிட்டுக்கள் அழைத்துவரப்பட்டதுடன், தரம் 04மாணவர்களால் பூக்கள் தூவி மகிழ்விக்கப்பட்டனர்.

புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி வெற்றியடைந்த மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களான ஏ.எம். சுலைமாலெப்பை, எம்.எஸ்.பாத்திமா றுஸ்தா ஆகியோர் மாணவர்களின் பெற்றோர்களினால் கெளரவிக்கப்பட்டதுடன், அதிபர் ஏ.எம்.அஸ்மிக்கான கெளரவமும் வழங்கப்பட்டது.

இம் மகிழ்ச்சிப் பெருவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் ஏ.எம்.றஹ்மத்துல்லா கலந்து சிறப்பித்திருந்தார்.

விசேட அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச். பெளஸ் , கெளரவ அதிதியாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். றஸ்மி, சிறப்பு அதிதியாக சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.எச். ஹம்மாத் ஆகியோருடன், அல்மினா பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எஸ்.றகீம், பழைய மாணவர்கள் சங்க செயலாளர் ஏ.சி.றிசாத் ஆகியோருடன் பெற்றோர்கள், பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.







கருத்துகள் இல்லை