அட்டாளைச்சேனையை சேர்ந்த எஸ்.எல்.தாஜுதீன் சுமார் 25 வருட கால தனது விளையாட்டு உத்தியோகத்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
1964 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்வியினை அக்கரைப்பற்று வலய அல்-முனீரா வித்தியாலயத்திலும், தனது உயர்கல்வியினை அட்டாளச்சேனை மத்திய கல்லூரியிலும் (தேசிய பாடசாலை) கற்றார்.
![]() |
| SL. Thajudeen Addalaichenai |
இவர் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அட்டாளச்சேனை பிரதேசத்தில் கிழக்கு மாகாண விளையாட்டு விழாவை கொண்டு வந்து மிக பிரம்மாண்டமான பல சாதனைகளை மாணவர்கள், இளைஞர்கள் நிலை நாட்டுவதற்கு காரணமாக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றினார்.
இவரது விளையாட்டு பாசறையில் வளர்ந்த மாணவர்கள் மாவட்டம், மாகாணம் மற்றும் தேசிய மட்டம் வரை பல்வேறு சாதனைகளை படைத்தார்கள்.
தற்போது இவரின் மாணவர்கள் விளையாட்டுத் துறையில் அம்பாறை மாவட்டத்தில் பிரகாசித்துக் கொண்டு பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் எஸ்.எல். தாஜூதீனின் ஓய்வு விளையாட்டுத்துறையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(அட்டாளைச்சேனைநெட் எஸ்.அஷ்ரப்கான்)


கருத்துகள் இல்லை