அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், பிரதேசத்தில் இயங்கும் சகல பிரத்தியேக (தனியார்) வகுப்புகள் நடத்தும் கல்வி நிலையங்களின் பொறுப்புதாரிகளுடன் இணைந்து சில காத்திரமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த முடிவுகள் 01/10/2025 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
01.சீருடை கட்டாயம்:
தரம் 09க்கு மேல் உள்ள பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லும் சகல மாணவர்களும் கட்டாயம் பாடசாலை சீருடையுடன் செல்ல வேண்டும்.
ஆண் மாணவர்கள் வெள்ளை சேட், பெண் மாணவிகள் பாடசாலை சீருடை அணிந்து செல்வது கட்டாயம்.
02.க.பொ.த சாதாரண தர(GCE O/L) வரையிலான வகுப்புக்கள் மாலை 7:00 மணிக்குப் பிறகு பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்த தடை செய்யப்பட்டுள்ளது.
03.க.பொ.த உயர்தரம் (GCE A/L ) வகுப்புக்கள் மாலை 08.00 மணி வரை மேற் கொள்ள முடியும்.
04.பரீட்சைக்கு தோற்றவுள்ள GCE O/L மற்றும் GCE A/L மாணவர்களுக்கு ஜுன் மாதத்திற்கு பின் மாலை 08.30 மணிவரை பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்த முடியும்.
05. பிரத்தியேக வகுப்புக்கான ஒரு மணித்தியாள கட்டணமாக தரம் 06 முதல் 09 வரை 50 ரூபாவும், தரம் 10 முதல் GCE O/L வரை 70 ரூபாவும் அறவீடு செய்ய முடியும்.
06. பிரத்தியேக வகுப்புக்கு செல்லும் மாணவிகளிடம் சேட்டைகள் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் கலந்துரையாடலில் பங்குபற்றியவர்களால் ஏகோபித்து எடுக்கப்பட்டவை.
இந் நிகழ்வில் கௌரவ உதவித் தவிசாளர் M.பாரூக் நஜீத், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல். பாயிஸ், எம்.எல்.றினோஸ், எஸ்.பாஹிமா மற்றும் பிரத்தியேக கல்வி நிறுவனங்களின் பொறுப்பு தாரிகள் சகலரும் கலந்து சிறப்பித்தனர்.
பிரதேச சபை
அட்டாளைச்சேனை


கருத்துகள் இல்லை