(அட்டாளைச்சேனை.நெட்)சட்டத்தரணி, ஆய்வாளர் சர்ஜுன் ஜமால்தீனின் நூல்கள் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை (04) அக்கறைப்பற்றில் இடம்பெற்றது
2025 ஜூலை 4ஆம் திகதி, அக்கரைப்பற்றில், சட்டத்தரணி, ஆய்வாளர் சர்ஜுன் ஜமால்தீன் அவர்களின் மூன்று முக்கியமான நூல்கள் வெளியிடும் நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெளியிடப்பட்ட நூல்கள்:
01.இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் - நீதியும் தண்டனையும்
02. சாட்சியமாகும் உயிர்கள்
03. எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம்
இந்த நூல்கள் மூன்றும் கடந்த கால மற்றும் சமகால அரசியல், சட்டம் மற்றும் சமூகப் பிணைப்புகளைக் கூறும் ஆய்வுப்பூர்வ நூல்களாகும்.
நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு விழாவிற்கு தனித்துவம் சேர்த்தனர். தேசிய காங்கிரஸின் தலைவர் மற்றும் கௌரவ மாநகர முதல்வர் .ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் அவர்களும் விழாவில் பங்கேற்று உரையாற்றி நூலாசிரியருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
மேலும் சமூகப் பொது ஆர்வலர்கள், எழுத்தாளர்களும், நூலாசிரியரின் குடும்பத்தினரும், நண்பர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவருக்கு உற்சாகம் வழங்கினர்.
இந்த நிகழ்வு, இலங்கை சமூகத்தில் சட்டம், நீதித்துறையும், அரசியல் வரலாறும் தொடர்புடைய விவாதங்களை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
Book Launch Event of Attorney and Researcher Sarjoon Jamaldeen Held Successfully.
On July 4, 2025, a grand event was organized in Akkaraipattu to mark the launch of three significant books authored by Attorney and Researcher Mr. Sarjoon Jamaldeen.
The books launched were:
01.Sri Lanka Easter Attacks – Justice and Punishment
02."Lives as Testimonies"
03.The Death of M.H.M. Ashraff
These three books are analytical works that delve into contemporary politics, law, and social dynamics in Sri Lanka.
Several dignitaries and members of the public participated in the event, making it a noteworthy occasion. Leader of the National Congress and Honorable Mayor A.L.M. Athaullah, as well as Leader of the All Ceylon Makkal Congress and Member of Parliament Rishad Bathiudeen, graced the occasion and delivered speeches congratulating the author.
Additionally, social activists, writers, family members, and friends of the author also took part, extending their encouragement and support.
This event served as a platform to spark dialogue on issues related to law, justice, and political history within Sri Lankan society.







கருத்துகள் இல்லை