Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய பிரதித் தவிசாளர் எம்.எப். நஜீத் – பாலமுனை இளைஞர்களால் கௌரவிப்பு!

பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஜனாப் எம்.எப். நஜீத் அவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் சிறப்பான நிகழ்வு இன்று (05) அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.

பாலமுனை வரலாற்றில் இளைஞரொருவர் பிரதித் தவிசாளர் பதவிக்கு தெரிவாகும் தருணத்தில், இளைஞர்கள் அவரை நேரில் சென்று வாழ்த்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில்,

சபையின் தலைவர் ஆசிரியர் A.L.M. சீத்,

ஆலோசகரும் விரிவுரையாருமான A.H.M. ரிபாஸ்,

நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு, புதிய தலைமுறை அரசியல்வாதிகளின் முன்னேற்றத்துக்கு ஊக்கமளிக்கக்கூடியது என பலர் பாராட்டியதுட்ண் அட்டாளைச்சேனை.நெட் இணையம் சார்பாகவும் வாழ்த்துக்கள்! 



கருத்துகள் இல்லை