அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மின்னொளியிலான மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி மிகவும் பிரமாண்டமான முறையில் எதிர்வரும் 28 ஆம் திகதி கோணாவத்தை கடற்கரை பொதுவிளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. AddalaichenaiNetwork
எட்டுப் பேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான (Knockout) சுற்றுப்போட்டியாக இது இடம்பெறவுள்ளதுடன், 56 அணிகளைக் கொண்டு திறந்த அடிப்படையில் (Open Draw) நிரல்படுத்தப்படவுள்ளது. 1_14வரையான அணிகள் 28 ஆம் திகதியும், 14_28 வரையான அணிகள் 29 ஆம் திகதியும், 28_42 வரையான அணிகள் 30ஆம் திகதியும், 42_56 வரையான அணிகள் 31ஆம் திகதியும் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இறுதிப் போட்டி ஓகஸ்ட் முதலாம் திகதி இடம்பெறும். குறித்த சுற்றுப்போட்டியில் வெற்றியடையும் கழகத்திற்கு 40ஆயிரம் ரூபா பணப்பரிசிலுடன், வெற்றிக்கேடயமும் வழங்கி வைக்கப்படும். இரண்டாமிடத்தினைப் பெற்றுக் கொள்ளும் அணிக்கு 20ஆயிரம் ரூபா பணப்பரிசிலுடன், வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்படவுள்ளன. அத்துடன் மூன்றாம், நான்காம் இடங்களை தக்கவைக்கும் அணிகளுக்கும் முறையே ரூபா 10 ஆயிரம், 5 ஆயிரம் ரூபா பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த மாபெரும் மின்னொளி சுற்றுப்போட்டிக்கான ஏற்பாடுகளை கழகத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய உபதலைவருமான எஸ்.எம்.இத்ரீஸ் தலமையிலான குழுவினர் மேற்கொள்வதாகவும், அதற்குப் பக்கபலமாக கழகத்தின் சிரேஷ்ட ஆலோசகரும், அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளருமான ஏ.சி.எம். றியாஸ் செயற்படுவதாகவும் கழகத்தின் தலைவரும், உடற்கல்வி பயிற்றுவிப்பாளருமான ஏ.எம்.றிஸ்வான் குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை