அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka தேசிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, அட்டாளைச்சேனை கடற்கரையோரம் இன்று 09.07.2025 சுத்தப்படுத்தப்பட்டதோடு, டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர, கிழக்கு மாகாண முதலமைச்யின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் ஒழுங்கமைப்பின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கௌராவ எ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் தலைமையில், கௌராவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் செயல்படுத்தப்பட்டது.
ஜும்ஆ பள்ளி வட்டார உறுப்பினர் கௌராவ எ.எல். பாயிஸ் (ISA) அவர்களின் நெறிப்படுத்தலுடன் அட்டாளைச்சேனை 07 பகுதியில் உள்ள பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமான கடற்கரை பகுதியில் சுத்தம் செய்யப்பட்டது. மேலும், கடற்கரை வீதி செப்பனிடல், பழுதடைந்த தெருமின் விளக்குகளைப் பழுதுபார்த்து திருத்தும் பணிகள் ஆகியனவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர், செயலாளர்,சபையின் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இத்தகைய சுத்தம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மற்ற பகுதிகளிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.






கருத்துகள் இல்லை