Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

ஒலுவில் அல்ஹம்றா மீண்டும் ஒரு வரலாற்றுச்சாதனை!



ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயம் இம்முறை வெளியான க.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகளில் முதன் முறையாக 8 மாணவர்கள் 9A பெற்று பெற்று நமது பாடசாலைக்கும் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்

மேலும் 8 மாணவர்கள் 8A பெற்று சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று முன்னணியில் திகழும் எமது பாடசாலை இம்முறை க.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகளிலும் வரலாற்றுசாதனையைப் படைத்துள்ளமை இம்மண்ணுக்கே பெருமை சேர்த்துள்ளது.

இதற்காய் உழைத்த எமது அதிபர் எமது கல்லூரியை முன்னணியாக்குவதற்கு இரவுபகலாய் பாடுபடும் ஆளுமை அஷ்ஷேக் யூகே அப்துர்ரஹீம் நளீமி, மற்றும் அவரோடு துணை நிற்கும் பிரதி, உதவி அதிபர்கள் குறிப்பாக தரம் 10-11 வலயத்தலைவர்கள் MC நசிறுதீன், AF பாசினா மற்றும் உதவிப்பகுதித்தலைவர்கள் இம்மாணவர்களுக்குச் சிறப்பாய்க் கற்பித்த சகல ஆசிரியப் பெருந்தகை களுக்கும் மேலான ஒத்துழைப்பை வழங்கிய பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் உளம்பூத்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நற்செயல்களுக்கு என்றும் நற்கூலி உண்டு. இன்ஷா அல்லாஹ்

ஜே.வஹாப்தீன் பிரதி அதிபர் அக்/அல்ஹம்றா ம.வி ஒலுவில்


கருத்துகள் இல்லை