Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

அட்டாளச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 03 அதிரடியாக கைது!


அட்டாளச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவரை இன்று (06) பொலிஸார் கைது செய்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றை அடுத்து, அட்டாளைச்சேனையில் – குறித்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது, இந்த சந்தேக நபர்கள் விற்பனைக்காக வைத்திருந்த போதைப் பொருளுடன் கைதானார்கள்.

இதன் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள் இருவரும் மற்றும் ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சுமார் 100 கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர்கள் – நாளை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களுடன் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

எஸ் ஜே புஹாது 

கருத்துகள் இல்லை